பெருந்தொற்று பரிசோதனைக்கு அச்சம் தெரிவிக்கும் மக்களுக்கு மத்தியில் தஞ்சையை சேர்ந்த115 வயது மிட்டாய் தாத்தா தைரியமாக சென்று பரிசோதனை செய்ததற்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்னர்.
தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் பெருந்தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.
ஆனால் பரிசோதனைக்கு பயந்து மக்கள் அங்கும், இங்கும் ஓடி ஒளிகின்றனர். ஆனால், அதே தெருவில் வசிக்கும் மிட்டாய் தாத்தா என்றழைக்கப்படும்115 வயது நிரம்பிய முகமது அபுகாசிர், தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டார். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் தாத்தாவை வெகுவாக பாராட்டினர்.
சத்தான ஆகாரங்கள் உண்டு மதுபானம், புகை பழக்கம் உள்ளிட்ட இல்லாமல் இருந்தால் தன்னை போல உடல் ஆரோக்கியமுடன் இருக்கலாம் என கூறி பலருக்கும் முன்னூதரனமாக விளங்குகிறது.