11 ஆயிரம் பிஹு நடன கலைஞர்கள் பிரதமர் முன் நடனமாடி கின்னஸ் சாதனை…

44
Advertisement

அசாமிய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் போஹா பிஹூதிருவிழாவில் பிஹூ நடனம் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் பிஹூ நடனத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்லும் வகையிலும், இதனை உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் வகையிலும் மிக பெரிய அளவில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு மாநில அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக அசாம் மாநிலம் முழுவதும் ஆடிஷன்கள் நடத்தப்பட்டு, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்ந்து சில நாட்களாகவே நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகையிலும் ஈடுபட்டு வந்தனர்.