ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதன் முதலாக பொதுமக்கள் 4 பேர் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம்

255
Advertisement

விண்வெளி சுற்றுலாவின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதன் முதலாக 4 பேரை வெண்வெளிக்கு அழைத்து சென்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம், ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவன தலைவர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையில் 4 பேர் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். 

இன்ஸ்பிரேஷன் -4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் மூலம்  விண்ணில் பாய்ந்துள்ளது. 

விண்வெளிக்கு சென்றுள்ள 4 பேரும், 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் தங்களது பயணத்தை நிறைவு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.