விஷத்திற்குச் சமமான சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்

495
Advertisement

நல்ல உடல் ஆரோக்கியத்திற்குச் சுத்தமான செக்கு எண்ணெயில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம், ஆனால் பலரின் வீட்டில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்  அதாவது refined oil பயன்படுத்தியே உணவுகள் சமைக்கப்படுகிறது, இது உடலுக்குக் கட்டாயம் தீங்கு விளைவிக்கும், மருத்துவர்கள் அளவான  மற்றும் சுத்தமான  எண்ணெய்யில் சமைத்த உணவுகளைச் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்,

பல ஆராய்ச்சி ஆய்வுகள் படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் சமைப்பதால் சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் அதிகம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்கு காரணம் இதன் செய்முறை, சுத்திகரிக்கப்பட்ட  எண்ணெயை தயார்படுத்த ஹெக்ஸேன் (Hexane) என்னும் வேதிப் பொருளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும், இது உடலை மோசமாகப் பாதிக்கும், மேலும் விதையிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு உச்சபச்ச வேப்பத்தில் சூடுபடுத்தப் படுவதால் அதிக trans fats உருவாகுகிறது, அதிக வேப்பத்தின் சூட்டால் எண்ணெயில் துர்நாற்றம் வீசும் இதை நீக்க ப்ளீச் பயன்படுத்துகிறார்கள், இச்செய்முறை எண்ணெயின் சத்துக்களை அழிப்பதோடு உடலுக்கு கேடாகும்.

இதற்கு மாற்றாகச் சுத்திகரிக்கப்படாத சிறிது வேதிப் பொருள் இருக்கும் கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தி சமைக்கலாம். இல்லையென்றால்  செக்கு எண்ணெய்யை பயன்படுத்தலாம்