விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மேம்பாலம்

281
Advertisement

விலங்குகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள
மேம்பாலம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

மும்பை- நாக்பூர் இடையே 701 கிலோ மீட்டர் தொலைவுக்கு
6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 2015ல் அறிவிக்கப்பட்டு
2017ல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 2018 ஆம் ஆண்டில்
அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு
வருகிறது.

இந்த விரைவுச்சாலை மகாராஷ்டிரா மாநிலத்தின் 10 மாவட்டங்களிலுள்ள
390 கிராமங்கள் வழியாகக் கடந்துசெல்கிறது. இந்தச் சாலையால்
மும்பைக்கும் நாக்பூருக்கும் இடையே பயணத்தின்போது 8 மணி நேரம்
குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த விரைவுச்சாலையில் வாகனங்கள் 150 கிலோ மீட்டர்
வேகத்தில் மட்டுமே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 6 வழிச்சாலையில் 9 பசுமை மேம்பாலங்கள், 17 சுரங்கப்பாதைகள்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த 6 வழிச்சாலையின் இருபுறங்களிலும் புலி,
சிங்கம் உள்பட காட்டுவிலங்குகள், சிறுத்தைப் புலிகள், ஊர்வன அனைத்தும்
நுழையாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவையனைத்தும் பாதுகாப்பாக இப்பகுதியைக் கடந்துசெல்லும் வகையில்
இந்தப் பாலங்களும் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலங்கள் 32,
45 மற்றும் 60 மீட்டர் அகலம் மற்றும் 120 மீட்டர் நீளம் கொண்டவை.

இந்தியாவில் விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட முதல் மேம்பாலமாக
இது அமைந்துள்ளது. Источник порнухи 2kiski