ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க அமெரிக்காவே காரணம்

392
Flag of North Korea in front of a clear blue sky
Advertisement

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி ஜி சாங்கின் அமெரிக்காவை குற்றஞ்சாட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் . உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியாயமானதே. ரஷ்யாவின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகள் கேட்க தவறிவிட்டது .அமெரிக்கா நேட்டோ வாயிலாக மறைமுகமாக தனது ராணுவ சக்தியை ரஷ்யாவுக்கு எதிராக நிலைநிறுத்த நினைக்கிறது . அமெரிக்கா இரட்டைக் கொள்கையுடன் செயல்பட்டு உக்ரைன் போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு அமைதி, ஸ்திரத்தன்மை என்ற போர்வையில் அவற்றை தவறாக வழிநடத்துகிறது. உலகளவில் அமெரிக்க ஆதிக்க காலம் காலாவதி ஆகிவிட்டது . உக்ரைன் மீது தாக்குதல் நடைபெற அமெரிக்கா தான் காரணம். இதிலிருந்து சிறிய நாடுகள் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் பலம் இல்லாவிட்டால் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும் என்பதே அது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் .