`மூடப்பட்ட காபூல் விமான நிலையம்.. திடீர் துப்பாக்கிச் சூடு’ – தலிபான்கள் அட்டூழியம் ஆரம்பம்

385
Advertisement

ஆப்கன் தலைநகர் காபூலில் அனைத்து விமான சேவைகளும்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலிபான்கள்  வசமாகி உள்ளது.  ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நாட்டில் மீண்டும் பழமைவாதம் தலை துாக்கும் என அஞ்சும் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சம் கேட்க துவங்கியுள்ளனர்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆப்கனை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், காபூலில் அனைத்து விமான சேவைகளும்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த  வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  காபூலில் அனைத்து விமான சேவைகளும்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனையடுத்து, காபூல் விமான நிலையம் மூடப்பட்டது. முன்னதாக, காபூலில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 129 இந்தியர்கள் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதிபர் அஷ்ரப்கனி ஆப்கானிஸ்தானை ஏமாற்றிவிட்டதாகவும், ஆப்கானிஸ்தான் மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள் என ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் முன்னாள் எம்.பி ஜமில் கர்சாய் தெரிவித்தார்.