முகத்தைப் பொலிவாக்கும் பலா கொட்டைகள் 

215
Advertisement

உலகத்தின் மிகப் பெரிய பழ வகையான பலாப்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது, அதிலும் பழத்தைத் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால் அது தேவாமிர்தம்

பொட்டாசியம், வைட்டமின் பி, புரதம் உள்ளிட்ட பல சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது,  ஆனால் பலா விதைகளின் ஆரோக்கிய பலன்கள் நம்மில் பலருக்கும் தெரியாது

பலா விதைகளின் பலன்களைத் தெரிந்துக் கொண்டால், இனி அதனைத் தூக்கி எறிய மாட்டீர்கள், இது முகத்தில் உண்டாகும் சுருக்கங்களைக் குறைக்கும் சருமப் பொலிவுக்கு உதவும்.

இதில் உள்ள மைக்ரோ நியூட்ரியன்டுகள் புரதச் சத்துக்கள் சரும நோய்களைத் தடுப்பதுடன், மன அழுத்தத்தைக் குறைக்கும் மேலும் கூந்தலின் வேர்க்கால்களைக் வலுப்படுத்தும்

இரும்பு சத்து அதிகம் இருக்கும் பலா விதைகள் அனீமியா போன்ற ரத்த குறைப்பாடுகளைத் தடுக்கும் ரத்தத்தின் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

இதில் வைட்டமின் – ஏ அதிகம் இருப்பதால் கண் பார்வையைத் தெளிவாக்க உதவும்,இதனால் மாலைக்கண் நோய் ஏற்படாது.

பலா கொட்டைகளைக் காயவைத்து, நங்கு பொடியாக்கி ,அஜீர்ணம் ஏற்படும் போது தண்ணீர் கலந்து குடித்தால் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்கும் .