புற்றுநோய் வராமல் தடுக்கும் பூசணிக்காய்

223
Advertisement

பூசணிக்காவில் பல விதமான நன்மைகள் இருக்கிறது, அதனைப் பற்றி சில விஷயங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்,

பூசணிக்காவில் பல வகைகள் இருக்கிறது, மஞ்சள் பூசணி, பரங்கிகாய், சக்கரை பூசணி, வெண்பூசணி, கல்யாணபூசணி, திருஸ்டி பூசணி ஆகியவை இருக்கிறது.

பூசணிக்காவில்  வைட்டமின் ஏ, சி, இ, பி6, ஆகியவை ஆக்சிடன்ட , ஆல்பா, பீட்டா, கரோட்டீன், கால்ஷியம் போன்ற அணைத்து விதமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் பூசணி விதைகளிலும் பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

பொதுவாக உடல் சூட்டைத் தணிக்கிறது மற்றும் அனைத்து விதமான சிறுநீராக வியாதிகள் வராமல் தடுக்கிறது, மேலும் இரத்த விருத்தியை அதிகப்படுத்துகிறது. சிலர் தொடர் இருமல் மற்றும் நெஞ்சுச் சளியால் அவதிப்படுவார்கள் அவர்களுக்கு பூசணி சிறந்த மருந்தாகும்.

தொடர்ச்சியாக பூசணிக்காவை சாப்பிடுவதால், புற்றுநோய் மற்றும் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது,

இதில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், எலும்பு மற்றும் தசை சம்மந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.

மேலும் நார்ச் சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நாடாப் புழுக்களை வெளியேற்றுகிறது, பொதுவாக அன்றாடம் செய்யும் வேலைகளால் உடல் சோர்வடையும் எனவே உடல் சோர்வையும் போக்குகிறது.