நீரழிவு நோயைக் குணப்படுத்தும் தேங்காய் பூ

263
Advertisement

இளநீர் மற்றும் தேங்காயில் பல விதமான நன்மைகள் இருக்கிறது, ஆனால் இதுவரை தேங்காய்ப்பூவில் இருக்கும் அறியப்படாத விஷயங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

இளநீரை அடிக்கடி பருக முடிந்தாலும் தேங்காய் பூ என்பது அரிதாகக் கிடைக்கும் ஒன்றுதான், எனவே தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். அதிலும்  20 நாட்களுக்குப் பின்னர் தேங்காய் கருத்து வளர ஆரம்பிக்கும். அப்போது அந்த பக்குவத்தில் தேங்காயை  உடைத்தால் தேங்காய்ப்  பூ கிடைக்கும். 

தாய்ப்பாலில் மட்டுமே இருக்கும் சில சத்துக்கள், இளநீரில் தான் உள்ளது, அப்படிப்பட்ட இளநீர் கருவாக வளர்ச்சி பெருகையில் அதாவது தேங்காய்ப் பூவாக மாறுகையில் அதில் அதிகப்படியான சத்துப்பொருட்கள் நிறைந்திருக்கிறது. 

தேங்காய்ப் பூவில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு மட்டுமில்லாமல் இது இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாட்டைத் தூண்டுவதால் நீரழிவு நோயும் குணமடையும் என்கிறார்கள். ஒரு முழு  தேங்காய்ப் பூவை உண்பது நல்லது அதுவே அளவிற்கு அதிகமாக உண்டால் அது பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும்.