செவ்வாய்க் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA

337
Advertisement

மற்ற எந்த உலக நாடுகளை விடவும் அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி மையம் செவ்வாய்க் கிரகத்தில்  பல வருடமாக மிகத் தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது, ஆங்கிலத்தில் mars என்று அழைக்கப்படும் செய்வாய் கிரகத்தில் இதுவரை ஐந்து ரோவர்களை நாசா அனுப்பியுள்ளது, ரோவர்கள் என்றால் கரடு முரடாக இருக்கும் கிரங்களில் பயணித்து ,ஆராய்ந்து , கிரகத்தின் முக்கிய தகவல்களை அனுப்பும் வண்டியாக இருக்கிறது.

ஆனால் செவ்வாய் கிரகத்தில் மிக ஆக்டிவாக செயல்படும் ஒரே ரோவர் ( persavarance ) பெர்சவரென்ஸ் ரோவர் தான், எனவே சமீபத்தில் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் தனித்துவமான பாறையில் ஓட்டை போட்டுள்ளது, அப்போது அந்த ஓட்டைக்குள் ஒரு அதிர்ச்சி காத்திருந்து. அதில் organic rich materias கிடைத்துள்ளது. அதாவது கரிம வளமான பொருள் கிடைத்துள்ளது.

இதனால் ஆதிகாலத்தில் செவ்வாயில் நுண்ணுயிர்கள் வாழ்ந்துள்ளதற்கான அறிகுறிகள் வெளியானது, நாசாவின் ரோவர் ஓட்டை போட்ட பாறை  (Wild ridge ), இப்பாறை பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உப்புநீர் ஏரியில் குடியேறிய சேர் மற்றும் மெல்லிய மணலால் உருவான ஒரு பாறை ஆகும்.

செவ்வாய் கிரகத்தில் கிடைத்த பாறை மாதிரிகள் அக்கிரகத்தில் உயிரினம் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது, எனவே அந்த பாறை மாதிரிகளை (Rock samples) விரைவில் பகுப்பாய்வு செய்யும் போது, நாசா விஞ்ஞானிகள் கற்பனைக்கு எட்டாத உண்மைகளைக் கண்டுபிடிக்கலாம்.