சுவர் விளம்பரம் செய்யத் தடை

250
Advertisement

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பொதுஇடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுவது தொடர்பான வரையறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளரின் அனுமதி இருந்தாலும், சுவரில் எழுதவோ, சுவரொட்டி போன்றவற்றை பயன்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.