கோடைக் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் மசாலா

320
Advertisement

பொருட்கள் தமிழ்நாட்டில் கோடைக் கால வெயில் மக்களை வாட்டி வதைக்கின்றது, தமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் 35°c வெப்ப நிலை பதிவாகி இருந்தது மேலும் சென்னையில் 33°c  வெப்ப நிலை பதிவாகி இருந்தது மே மாதத்திற்கு முன்னதாகவே  வெப்பம் மிக அதிகமாக உள்ளது.

எனவே மக்கள் வெப்பத்தைத் தணிக்க பொதுவாக செயற்கை குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர், எனவே வெப்பத்தைத் தனிக்கும் மசாலா பொருட்களை இப்போது தெரிந்துகொள்வோம், முதலில் புதினா ஒரு குளுமையான பொருள் ,இது பொதுவாக வயிற்றுப் புண்ணைக்  குணப்படுத்தும் அஜீரணம் மார்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்லது மேலும் வெயிலால் எரிந்த சருமத்தை ஒளிரச் செய்யவும் உதவுகிறது.

சீரகம் வெப்ப காலத்தில் நச்சு நீக்கும் குளிர்விக்கும் முகவராக இருக்கிறது ,மேலும் பொதுவாக சீரகத் தண்ணீரை அருந்துவது நல்லது இரைப்பை பிரச்சனைகள் காரணமாக ஏற்படும் வீக்கம் பிரச்சனைகளுக்குச் சீரக விதைகள் தீர்வாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கொத்துமல்லி  காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளைக் கொண்டது. கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும், கொத்துமல்லி இலைகள் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளன. இது  கோடையில் வெப்பத்தால் நம் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

தனியா  உடல் சூட்டைத் திணிக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக இருக்கிறது செரிமானத்திற்கு தேவையான சுரப்பியைச் சுரக்க வைக்க உதவுகிறது, எனவே இதுப் போன்ற மசாலா பொருட்களை எல்லாம் சமையலில் சேர்ப்பதினால் கோடைக் காலத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்க உதவுகின்றது..