கொரோனா பாதிப்பின் பக்கவிளைவாக மாறுகிறதா அல்சைமர் நோய்

252
Advertisement

கொரோனாவில் மீண்ட 80 % மக்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது, எனவே அல்சைமர் நோய் குறித்த தகவலை இத்தொகுப்பில் பார்க்கலாம். உலகளவில் கடந்த ஒரு வருடமாக 0.35 சதவீதத்திலிருந்து 0.60 % என இருமடங்காக அல்சைமர் உயர்ந்துள்ளது, அதே நேரம் கொரோனா பாதிப்பின் அடுத்த கட்ட பக்கவிளைவாக அல்சைமர் நோய் மாறுகிறதாக என்ற சரியான புரிதல் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நரம்பு செயலிழந்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில் அல்சைமர் நோய் முதலிடத்தில் உள்ளது, அல்சைமர் மறதி சார்ந்த பாதிப்பு என்பதால், இது பெரும்பாலும் முதியவர்களை அதிகமாகத் தாக்குகிறது, இதனால் மூளை சரியாகச் செயல்படாது, இதன் காரணமாக அன்றாட வேலைகள் மறதியால் பாதிப்படையும், சில சமயங்களில் தங்களது வீட்டிற்குண்டான வழியை மறந்திட நேரிடும், இந்த நோய் சமந்தமாக பிரகாஷ்ராஜின் ஓ காதல் கண்மணி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். 

அல்சைமர் நோயை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்பில்லை, எனவே மருந்து மாத்திரைகள் வழியாக நோயின் பக்கவிளைவுகளைக் குறைக்கமுடியும், இந்த நோய் பெரும்பாலும் 65து  வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்குக்கிறது.