குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?

337
Advertisement

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து செப்டம்பரில் முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நிமோனியா உள்ளிட்ட நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க  நியுமோகோக்கல் தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக கூறினார்.

வறுமையால் பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் உடல்நலம் தேறிவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கான ஆய்வு செப்டம்பரில் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

இதன்பின்னரே, குழந்தைகளுக்கான கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.