கால்பந்து போட்டியில் தோற்றவர்களை உதைத்த ரசிகர்கள்

210
Advertisement

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பைக்கான
கால்பந்து போட்டியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 நாடுகள்
கலந்துகொண்டன.

இத்தாலித் தலைநகர் ரோம் நகரில் 2021 ஆம் ஆண்டு, ஜுன் 12 ஆம்
தேதிமுதல் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப்போட்டியில் உலகத்
தர வரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள இத்தாலியை சந்தித்து
இங்கிலாந்து. இறுதிப்போ0ட்டி லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில்
நடந்தது.

55 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததால்
எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனவே, இந்த முறை யூரோ கோப்பையை வென்றுவிடும்
திடமான முடிவில் களமிறங்கியிருந்தது. அதற்கேற்ப ஆட்டம் தொடங்கிய
இரண்டாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் ஒரு கோல் அடித்தார்.

முதல் பாதி ஆட்டத்தில் 1/0 என்கிற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில்
இருந்தது. அதேசமயம் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இத்தாலியும் ஒரு கோல்
அடித்து சமநிலைக்கு வந்தது. உடனே பரபரப்பு பற்றிக்கொண்டது.

அப்போது ஆட்டத்தின் நேரம் முடிவடைந்துவிட்டதால், சூட் அவுட் முறையில்
இத்தாலி ஒரு கோல் அடித்து 3க்கு 2 என்கிற கணக்கில் வெற்றிபெற்று யூரோ
கோப்பையைத் தட்டிச்சென்றது.

இதனால் வெற்றிக் கனவில் மிதந்த இங்கிலாந்து ரசிகர்கள் கடுங்கோபம்
அடைந்து அங்கிருந்த பார்வையாளர்களைக் கடுமையாகத் தாக்கியும்
காலால் உதைத்தும் அட்டூழியத்தில் ஈடுபடத் தொடங்கினர். இங்கிலாந்து
ரசிகர்களின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் ரவுடிகளைப்போல்
இங்கிலாந்து ரசிகர்கள் நடந்துகொண்டதைப் பலரும் கண்டித்தனர்.