காட்டு யானைகளின் அட்டூழியத்த பாருங்க…

201
Advertisement

கேரளா மாநிலம் வாளையாறு வனப்பகுதியில் இருந்து 17 காட்டு யானைகள் கஞ்சிக்கோடு ஐ.ஐ.டி வாளகத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


வாளையாறு வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள், அவ்வப்போது அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அட்டகாசம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

குறிப்பாக, ஐயப்பா மலைப் பகுதியில் வசிக்கும் சுருளி கொம்மன் என்ற யானை, 16 யானைகளுடன் நகர்ப்பகுதியில் நுழைந்துள்ளது.

கஞ்சிக்கோடு ஐ.ஐ.டி. வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், நுழைவு வாயில் கதவுகள், சுவர்கள் ஆகியற்றை இடித்துத் தள்ளி யானைக் கூட்டம் நுழைந்ததால், அங்கிருந்த பணியாளர்கள் பீதியடைந்தனர்.

யானைகளின் அட்டகாசம் அதிகரித்ததை அடுத்து, பணியாளர்கள் அனைவரும் கட்டுமானம் நடக்கும் கட்டடங்களின் உச்சிக்கு சென்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வாளையாறு வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின், பன்னிமடா, ஊரோலி, இளம்பரக்காடு வழியாக 17 யானைகளும் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.

ஆக்ரோஷ குணம் கொண்ட சுருளி கொம்பன் யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், அதனையும், யானை கூட்டத்தையும் நிரந்தரமாக காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.