கர்நாடக சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா

212
Advertisement

கர்நாடக சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சித்தராமையா தொடர்ந்து சட்டசபையில் பேசிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாள் கூட்டம் விதான் சவுதாவில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விவரங்களை எடுத்து கூறி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சித்தராமையாவின் வேட்டி திடீரென்று அவிழ்ந்து தெரியாமல், தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனை கவனித்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தனது இருக்கையை விட்டு எழுந்து சித்தராமையாவின் காது அருகில், உங்கள் வேட்டி அவிழ்ந்துள்ளது என்று மெல்லிய குரலில் கூறினார்.

உடனே சித்தராமையா, வேட்டியை சரிசெய்தார். இந்த காட்சி வைரலாகி வருகிறது.