ஆஸ்திரேலியாவில் இருந்து பல வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இம்மாதம் தொடக்கத்தில் வெடித்து சிதற ஆரம்பித்தது.
மத்திய டோங்கா தீவுகளின் அமைந்துள்ள இந்த எரிமலை வெடிக்க துவங்கியதால் நீராவி மற்றும் சாம்பல்கள் கக்கத் ஆரம்பித்தது , இது கடலில் கலந்து கடல் நீரின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
சரியாக எரிமலை வெடித்த அடுத்த 11 மணி நேரத்தில் பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் இருந்து வெளிப்பட்டது , இத்தகவலை நாசாவின் புவி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் இத்தீவின் படங்களை படம்பிடித்துள்ளது.
முன்னதாக 1 ஏக்கர் பரப்பளவிலும் மற்றும் கடல் மட்டதிலிருந்து 33 அடி உயரத்தில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் செப்டம்பர் 20க்குள், இந்த தீவு 24,000 சதுர மீட்டர் (6 ஏக்கர்) பரப்பளவாக பெருகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
நீருக்கடியில் இருக்கும் நீர்மூழ்கி எரிமலைகள் வெடித்து சிதறும் போது உருவாக்கப்பட்ட தீவுகள் போன்ற அமைப்பு பெரும்பாலும் குறுகிய காலமே நீடித்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.