இரட்டை குழந்தைகளுக்கு 2 தந்தைகள் மருத்துவர்கள் அதிர்ச்சி 

226
Advertisement

இளம் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர், மிக வினோதமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதாவது, ஒரு பெண்ணிற்குப் பிறந்த இரட்டை குழந்தையின் DNA  வெவ்வேறாக இருக்கிறது, இந்த நிகழ்வை Heteroparental Superfecundation என மருத்துவ உலகில் குறிப்பிடுகின்றனர்.

ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் தாம்பத்தியம் கொண்டிருந்த காரணத்தினால், இத்தகைய கருத்தரிப்பு நிகழ்ந்திருக்கலாம் என அறியப்படுகிறது, தான் பெற்ற இரட்டை குழந்தைகளின் தந்தை யார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் , அப்பெண் paternity டெஸ்ட் எடுக்க முடிவுசெய்தார், பரிசோதனையின் முடிவுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அப்பெண். 

இரட்டை குழந்தைகளின் தந்தை வெவ்வேறு நபர்களாக இருந்தாலும், குழந்தைகளின் தோற்றம் ஒன்றாக இருப்பது மற்றொரு ஆச்சரியத்தை உண்டாகியுள்ளது. இதுகுறித்து பெண்கள் மருத்துவ நிபுணர் துலியோ ஜார்ஜ் ஃப்ரான்கோ பேசுகையில், தாயின் இரு காரு வெவ்வேறு ஆண்களின் விந்தணு மூலம் கருத்தணிக்கும் போது, இத்தகைய நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது, இவர்கள் வெவ்வேறு நஞ்சுக்கொடிகளில் வளர்வார்கள், இதுபோல நிகழ்வு 10 ஆண்டுகளில் ஒருமுறை  நடக்க வாய்ப்புள்ளது என்றார், இச்சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.    

Six month old twin boys laughing and smiling