இயற்கையாக வலிகளை தீர்க்கும் உணவுகள்

345
Advertisement

உணவே மருந்து என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப  நாம் உண்ணும் உணவே நம் ஆரோக்கியத்தையும் வாழ் நாளையும் தீர்மானிக்கின்றன . நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்ட சித்த மருத்துவம் போன்றவற்றில் நாம் உண்ணும் உணவே மருந்தாக வழங்கப்பட்டது . இது போன்று உணவுகள் மருந்தாக மட்டுமில்லாமல் உடலில் ஏற்படும் வலியை குறைக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன . மஞ்சள் , இஞ்சி , செர்ரி பழம் , கிராம்பு , காபி , கெமோமில் தேயிலை , எலுமிச்சை போன்ற உணவுகள் இயற்கையாகவே  உடலில் ஏற்படும் தலை வலி , பல் வலி , உடல் வலி போன்ற வழிகளை குறைக்க உதவுகிறதென்று ஆய்வின்  மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது . உடலில் ஏதேனும் வலி ஏற்பாடும் போது இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து நிவாரணம் பெறலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றன .