இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.


இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிகெட் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருத்தி மந்தனா 86 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட்டுளை இழந்து தடுமாறியது. இருப்பினும் மறுமுனையில் நிலைத்து ஆடிய மோனி சதம் அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய வீராங்கனை கோஸ்வாமி, 5 பந்துகளில் 10 ரன்களை விட்டுக்கொடுத்த, நிலையில் அவர் வீசிய கடைசி பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது.

இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரையும் அந்த அணி கைப்பற்றியுள்ளது.