ரெய்னா அணைத்து வகையான இந்திய கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஒய்வு பெற்றார், ஆனால் இந்த முடிவிற்குப் பின்னால் ரெய்னாவின் புதிய மாஸ்டர் பிளான் குறித்த தகவல் தெரியவந்துள்ளது, ரெய்னா மற்றும் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து 2020 ஆம் ஆண்டு ஒன்றாக ஒய்வு பெற்றனர், ரெய்னா சி எஸ் கே அணியின் வரலாற்றில் மிக முக்கிய அங்கமாக இருந்துள்ளார், நான்கு முறை , ஐ பி எல் பட்டத்தை சி எஸ் கே வென்றபோதும், இவர் அணியிலிருந்துள்ளார், அதிலும் சி எஸ் கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரரும் ரெய்னா தான், 176 போட்டிகளில் 4687 ரன்களை அடித்துள்ளார்,
இது குறித்து, சி இ ஓ காசிவிஷ்வநாதன் கூறுகையில் ரெய்னா அணியில் மிக முக்கிய அங்கமாக இருந்துள்ளார், 10 வருடங்களுக்கு மேலாக தனது கடினமான உழைப்பை சி எஸ் கே அணிக்காக அர்ப்பணித்த வீரர், அதிலும் தோனிக்கு மிகவும் பக்கபலமான ஒரு வீரராக இருந்துள்ளார் ரெய்னா, எனேவ இரண்டு நாட்களுக்கு முன்பே அவரது ரிட்டையர்மண்ட் முடிவு குறித்து எங்களிடம் கூறினார், அவரது முடிவிற்கு நாங்கள் மரியாதை செலுத்துகின்றோம், இங்குதான் ரெய்னாவின் மாஸ்டர் பிளான் தெரிகிறது, ரெய்னா தற்போது அணைத்து விதமான வெளிநாடு டி -20 லீக் தொடர்களில் விளையாட இயலும், அதிலும் சென்னை புதிதாக வாங்கிய ஜோகனஸ்பர்க் ( johannesburg ) அணியிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது, இதன் காரணமாகவே, சி எஸ் கே நிர்வாகத்திற்கு அவர் முன்னதாக தனது ஒய்வு முடிவு பற்றிக் கூறியுள்ளார், இதனை உறுதிப்படுத்துவது போல் சமீபத்தில் ரெய்னா குறித்த தகவல்களை காசிவிஷ்வநாதன் அதிகம் பேசிவருகிறார்,இன்ஸ்டாவிலும் சி எஸ் கே ரெய்னாவின் அன்றாட வாழ்கைமுறையை பற்றி பதிவிடுகிறது, எனவே ரெய்னா ஜெ எஸ் கே அணிக்காக விளையாட வேண்டுமா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.