வெற்றியடைய சி எஸ் கே செய்தது இதுதான்!

255
Advertisement

சி எஸ் கே ரசிகர்களுடைய மனசு முழுவதும் இப்போ சந்தோஷம் பெருக் எடுத்து ஒரு ஆறா ஓடிக்கிட்டு இருக்கும் ,சி எஸ் கே கதை அவளவுதான் டீம் சரி இல்ல கேப்டன்சி சரி இல்ல, சி எஸ் கே கண்டிப்பா come back கொடுக்க மாட்டாங்க, இப்படிப் பல விஷயம் பேசினவங்க எல்லாம் வாய்ய முடிக்கோங்கப்பா அப்படினு சொல்லுற மாதிரி சி எஸ் கேவுடைய Performance ஆர் சி பிக்கு எதிராக இருந்தது.

ஐ பி எல் வரலாற்றுல ஆர் சி பிக்கு எதிராக தங்களுடைய 23வது வெற்றிய மாஸ்சா பதிவு செய்தாங்க சி எஸ் கே, சரி Straight-அ முக்கியமான விஷயங்கள பாக்கலாம் ஷிவம் துபே மற்றும் ராபின் உத்தப்பா, என்ன பாட்னர்ஷிப்ங்க மரண அடி 165 ரன்கள் சேர்ந்து அடிச்சி ஆர் சி பி பவுலிங்க பிரிச்சு எடுத்துட்டாங்க, அது மட்டும் இல்லாம இந்த சீசன் ஓட highest partnership இதுதான், இரண்டு பேரும் மொத்தம் 17 சிக்சர்கள  அடிச்சாங்க. இருவரும் அவங்களுடை  highest ஐ பி எல் Scoreம் அடிச்யிருந்தாங்க. 

இவ்வளவு நாள் சி எஸ் கே தேடிட்டு இருந்த அந்த ஒரு spark-தான், கோச் Stephen Fleming அவரும் இந்த spark-தான் தேவைனு சொல்லியிருந்தாரு ஷிவம் துபே மற்றும் ராபின் உத்தப்பா அதிகப் படியாகவே spark-அ கொடுக்க, பார்க்குற ரசிகர்களுக்கு, அந்த பழைய சி எஸ் கே வைப் வந்துருச்சி பவுலிங்னு வரும்போது ஜடேஜா பவுலர்ச நல்லாவே ரோட்டேய் செய்தாரு, ஜடேஜாவுடைய கேப்டன்சியும் சிறப்பாக இருந்திச்சி, பவுலிங்ல மகேஷ் தீக்ஷனா 4 ஓவர் போட்டு 4 விக்கெட்ஸ் எடுத்து வெறும் 33 ரன்கள் கொடுத்துச் சிறப்பா Perform பண்ணாரு, இவர் ஒரு ஸ்ரீலங்கன் ஆப் Spinner, மற்ற சி எஸ் கே பவுலர்சும் நல்லாவே சப்போர்ட் செய்ய, இந்த ஐ பி எல் சீசன் ஓட முதல் வெற்றிய சி எஸ் கே அணி பதிவு செய்தாங்க.

Advertisement