விராட் கோலி மற்றும் சூர்யாவைப் பாராட்டிய ஆளுநர்

106
Advertisement

இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி – 20 தொடரை 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது, செப் 25 ஆம் தேதி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் மூன்றாவது டி- 20 போட்டி நடந்தது, உலக கோப்பையின் இறுதிப் போட்டி போல் மிகவும் விறு விறுப்பாக இப்போட்டி சென்றது, எனவே போட்டியை நேரில் கண்ட , தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் , விராட் மற்றும் சூர்யா ஆகியோரை பாராட்டியுள்ளார், இதுகுறித்து அவர் கூறுகையில் மிக சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றி, நம் தாய் திருநாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும், மேலும் தங்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றிப் பெறச் செய்த வீரர்கள், திரு.சூர்யகுமார் யாதவ், திரு.விராட் கோலி மற்றும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மிகச் சிறப்பாக ட்வீட் செய்துள்ளார்