விசித்திரமான மாஸ்க் அணிந்த கோலி 

34
Advertisement

2022 ஆசிய கோப்பை தொடர் மிக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குரூப் 4 சுற்று போட்டிகளை அணிகள் விளையாடுகிறார்கள், எனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் குரூப் 4 சுற்றில் மோதுகின்றனர், இதனால் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய அணி, ஆனால் பயிற்சியின்போது இந்திய அணியின் முக்கிய பேட்டரான விராட் கோலி, மிக வித்யாசமான மாஸ்க் அணிந்து பயிற்சி செய்து கொண்டிருந்தார், அதிலும் மிக வேகமாக  ஸ்பிரிண்ட் (Sprint ) முறையில் ஓடி கொண்டிருந்தார். அவரின் வித்யாசமான மாஸ்க் குறித்த தகவல் கிடைத்துள்ளது, இந்த மாஸ்கின் பெயர் ஹை ஆல்டிடுட் மாஸ்க் (high-altitude mask), கோலி ஒரு மிக சிறந்த பிட்னஸ் ஃப்ரீக் என்பதால், தனது பயிற்சி முறைகளை  மாற்றிக் கொண்டே இருப்பார், இந்த மாஸ்க் அணிந்து ஓடினாள் மூச்சி பயிற்சி அதிகரிக்கும் மேலும் சுவாசத்திற்கு முக்கியமாகச் செயல்படும் நுரையீரலை பலப்படுத்துகிறது, இதுவே கோலி இதுபோல மாஸ்க் அணிவதற்குக் காரணமாக இருந்துள்ளது, கோலி கடைசியாகச் சதம் அடித்து 1000 நாட்கள் கடந்த நிலையில், ஹாங்காங் அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், இதுபோலவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான குரூப் 4 போட்டியில் கோலி சிறப்பாக விளையாடுவாரா, என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.