வழக்கறிஞர்களின் சட்ட அறிவு, ஏழை – எளிய மக்களுக்கு நீதி பெற்றுத்தர பயன்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

38
Advertisement

வழக்கறிஞர்களின் சட்ட அறிவு, ஏழை – எளிய மக்களுக்கு நீதி பெற்றுத்தர பயன்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தரமணியில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா இன்று நடைபெற்றது.  இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா மலரை வெளியிட்டார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர்,  40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் நான்காயிரத்து 500 மாணவர்கள் கல்வி பயின்று வருவதை சுட்டிக்காட்டினார். 1989 ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டதையும் நினைவூட்டினார். ஏழை – எளிய மக்களுக்கு நீதி கிடைக்க,வழக்கறிஞர்களின் சட்ட அறிவு பயன்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

சட்டப்புத்தகத்தை தாண்டி, சமூக புத்தகத்தையும் வழக்கறிஞர்கள் பயின்று, சமூக நீதிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Advertisement