லஞ்சம் வாங்கிய அதிகாரியால் பறிபோன உயிர்

337
Advertisement

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால், வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். அவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளை தொடங்கியுள்ளார்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு தவணை பணம் வரும் போதும், வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர் மகேஸ்வரன் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்ததால், மணிகண்டனும் ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்துள்ளார். இருப்பினும் கடைசி தவணை பணத்தை கொடுக்காமல், மகேஸ்வரன் இழத்தடிப்பு செய்ததால், மனமுடைந்த மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகார் எழுந்ததை அடுத்து பணி பார்வையாளர் மகேஷ்வரனை

பணியிடைநீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.