மேற்குவங்கம், பீகார் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

33
Advertisement

மேற்குவங்கம், பீகார் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகார் மாநிலம், அராரியா பகுதியில் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு  மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆகப் பதிவானதாகவும் தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இதேபோல், மேற்குவங்க மாநிலம், சிலிகுரி பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சிலிகுரியில் இருந்து தென்மேற்கு பகுதியில் 140 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிரந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.