மூளைக்கு ஆபத்தாகும் டைப் 2 சர்க்கரை நோய்

223
Advertisement

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது, எனவே பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினரையும் சர்க்கரை நோய் பாதிக்கிறது.

ஆனால் மாறுபட்ட புதிய சர்க்கரை நோயால் மூளை பாதிப்படையும் என்று தெரியவந்துள்ளது, இதனை டைப் 2  சர்க்கரை நோய் என்றும் சொல்கிறார்கள், மேலும் டிமென்ஷியா ஏற்படக்கூடிய அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது, டிமென்ஷியா ஒருவகையான ஞாபக மறதி நோய் இது பொதுவாக முதியவர்களையே தாக்கும் ஆனால் இளம் வயதிலேயே டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு, இந்நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஏஜிங் தெரிவித்துள்ளது.

டைப் 2 சர்க்கரை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை, மற்ற வகை நீரிழிவு பாதிப்புகளை விட அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள், எனவே அனைவருமே டிமென்ஷியா மற்றும் அல்சைமர் மூளை நோயால் பாதிக்கப்படுவார்களா? என்று கேட்டால் ஆம் என்று தான் கூற வேண்டும். ஆனால், நீரிழிவை கட்டுப்படுத்தும் முயற்சியோடு, வேறு சில வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொண்டால் மூளை குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.