மீன் வாங்கும்போது கட்டாயம் கவனம் தேவை   

161
Advertisement

கடல் உணவுகள் என்றால் அசைவ பிரியர்களின் மிகவும் பிடிக்கும், அதிலும்  மீன் வகைகளில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது மேலும் சுவையாகப் பல வகையில் மீனை சமைத்து சாப்பிடலாம், வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் மீன் சேர்க்க வேண்டும்,

ஆனால் நல்ல மற்றும் ஃப்ரெஷான மீனை எப்படி பார்த்து வாங்குவது என்று மக்களுக்குக் குழப்பம் அதிகம்  இருக்கிறது, எனவே மீன்களை வாங்கும் போது சில முக்கிய விஷயங்களைப் பார்த்து வாங்கவேண்டும், முதலில் மீன் பார்ப்பதற்குப் புதிது போல் பளபளப்பாகவும் மற்றும் நல்ல நிறமாகவும் இருக்க வேண்டும்,         

 மூக்கை துளைக்கும் அளவிற்கும் மீன்கள் துர்நாற்றம் வீசுவதில்லை, எனவே அதிகப்படியான துர்நாற்றம் அடிக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும், மீனின் கண்கள் தெளிவாக இருந்தால் நல்லது அதுவே கண்கள் மங்களாக இருந்தால் வாங்க வேண்டாம். 

வாலை பிடித்துத் தூக்கி பார்த்தால் நேராகத் தொங்கும், இதுவே ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்ட பழைய மீன்கள்  வளைந்து தொங்கும். 

மீனின் செதில் பகுதியைத் தூக்கி பார்க்கையில், இளஞ் சிவப்பு நிறத்தில் ரத்த ஓட்டத்துடன் இருந்தால் ஃப்ரெஷான மீன் என்று அர்த்தம் , இதுவே செதில்கள் தொட்டால் ஒட்டவோ அல்லது உதிர்ந்து போனாலோ, அது பழைய மீனாகும் .

வால் கடினமாக இருக்க வேண்டும் வெட்டுக் காயங்கள் இருந்தால் வாங்கவேண்டாம், இதுவே  நல்ல மற்றும் ஃப்ரெஷான மீன்களைப் பார்த்து வாங்கும் வழிகள். 

happy male customer selecting cooled fish in local fishery