மாற்றுத்திறனாளி சிறுவனை அனுமதிக்காத விமான நிறுவனம்

474
Advertisement

பிரபல விமான நிறுவனமான இண்டிகோ airlines ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனை பிற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் என கூறி விமானத்தில் அனுமதிக்காத சம்பவம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இண்டிகோ நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தாலும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குடும்பத்திடம் விமான நிறுவனம் சமரசம் பேச, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் விசாரிக்க உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

26 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் வாழும் இந்திய நாட்டில் இன்னும் அவர்களுக்கு எதிரான பாகுபாடு, வேற்றுமை மற்றும் ஒடுக்குமுறை நிலவுவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிதுள்ளனர்.