மாகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் இடை விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொங்கன் மற்றும் மேற்கு மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன.
குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர்ழ் சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
நிலச்சரிவு காரணமாகவும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 164-லிருந்து. 192 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மழை, வெள்ளத்தால் 800 பாலங்களும், 290 சாலைகளும் சேதமடைந்துள்ளன.