புறக்கணிக்கப்படும் வீரர்கள் இந்திய அணி செய்த பெரிய தவறு 

117
Advertisement

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் ஆகஸ்ட் 6ஆம் தேதி, இந்தியா – இலங்கை அணிகள் மோதினர், முதலில் ஆடிய இந்திய அணி 173 ரன்கள் அடித்த நிலையில், சேசிங்கில் களமிறங்கிய இலங்கை அணி மிகவும் சிறப்பாக விளையாடிய, இந்திய அணியை வீழ்த்தியது, இதனால் இந்திய அணி இறுதி போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டத் தட்ட முடிந்தது, 

இதனால் இந்திய அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள், இந்திய அணியின் தவறுகள் என்னவென்றால், முதலில் இந்திய அணி 5 பவுலர்களுடன் விளையாடும் பிளான் வேலைக்காக வில்லை, இதுதான் இரண்டு தொடர் தோல்விக்கு முக்கியமான காரணமாகும்.

அதிலும் அனுபவம் வாய்ந்த பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் பாண்டியா ஆகியோர், டெப்த் பவுலிங்கில் , ஒரே ஓவரில் 15 மற்றும் 20 திற்கும் மேற்பட்ட ரன்களை இருவரும் கொடுத்துவிடுகிறார்கள், இதனால் இளம்வயதினரான அர்ஷிதீப் சிங் அவர்களுக்கு ரன்களை கொடுக்காமல் பந்து வீசுவது கடினமாக மாறிவிடுகிறது. 

Advertisement

அதிலும் இந்திய அணி ஸ்குவாடில் இருக்கும் சில வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல், புறக்கணிக்கிறது ஏன் என்று தெரியவில்லை?  பவர் பிளேவில் உடனடியாக விக்கெட்டுகள் தேவை, ஆனால் இந்தியா தோல்வி அடைந்த இருபோட்டிகளிலும் பவர் பிளேவில் உடனடியாக விக்கெட்டுகளை எடுக்கத் தவறியது, இதனை தீபக் சாஹர் சிறப்பாக செய்வார், ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, மேலும் அதிவேகப் பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கையும் அணியில் எடுக்கவில்லை, மேலும் அஷ்வினுக்கு இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்களுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.