பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் நிலவரம்…

199
Advertisement

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4 நாட்களில் 20 ஆயிரத்து 74 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 20 ஆயிரத்து 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் 16 ஆயிரத்து 420 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 243 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 385 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.