நொடிப்பொழுதில் நிகழ்ந்த ஆபத்து-குழந்தையை காப்பாற்றிய தந்தை

115
Advertisement

தந்தையின் உள்ளுணர்வால் சரியான நேரத்தில் தன்  குழந்தைகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் தந்தைகளை நாம் பார்த்திருக்கிறோம்.இந்நிலையில் நெஞ்சை பதறவைத்த விபத்தில் தன் குழந்தையை காப்பாற்றிய தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரலாகி வரும் வீடியோவில், நடைபாதையில் நிறுத்தியுள்ள மோட்டார் சைக்கிள் மேல் ஒரு வயது குழந்தை அமர்ந்துள்ளான்,குழுந்தையின் தந்தையும் அருகில் நிற்கிறார்.ஒரு கட்டத்தில் வேகமாக கார்  ஒன்று அவர்கள் நிற்கும் இடத்தை நோக்கி வருவதை கவனித்தார் அந்த தந்தை.

ஏதோ ஆபத்து என்று உணர்ந்த அந்த தந்தை ஒரு நொடி கூட தாமதிக்காமல்,குழந்தையை கையில் தூக்கிக்கொள்கிறார்.அவர் குழந்தையை எடுத்த மறு நொடி அந்த சார், குழந்தை உட்காந்து இருந்த மோட்டார் வாகனத்தை  இடித்து இழுத்து சென்றது.இதய துடிப்பை நிறுத்தும் இந்த விபத்தின் பதிவான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement