நெட்ஃபிலிக்ஸ் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட்ஸ்

264
Advertisement

உலகம் முழுவதும் நெட்ஃபிலிக்ஸ் மிக அதிகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது, பல கோடி மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள நெட்ஃபிலிக்ஸ் தற்போது ‘Two Thumbs up’ மற்றும் Two Thumbs Down என்ற புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பகுதியை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய முயற்சியில் ஈடுபடுவதாக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தைப் பார்த்த பயனர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த வீடியோக்களுக்கு Two Thumbs Up’ கிளிக் செய்யலாம்  அல்லது பயனர்கள் விரும்பாத வீடியோக்களுக்கு Two Thumbs Down கிளிக் செய்யலாம், எனவே பயனர்கள் ரசனைக்கு ஏற்ப அவர்கள் Two Thumbs Up செய்த படம் மற்றும் அப்பட நடிகர் அல்லது இயக்குநர் மற்றும் அதே பாணியில் உள்ளப் படங்களே அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும், Two Thumbs Down கிளிக் செய்தால் பயனர்கள் விரும்பாதவை எனக் கருதப்படும்.

இந்த சிறப்பான அப்டேட் யூடியூப் போன்ற வகையிலிருந்தாலும், தனது வாடிக்கையாளர்களின் ரசனைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது நெட்ஃபிலிக்ஸ் , ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் என அனைத்து வகையான தளங்களிலும் இந்த இரட்டை தம்ஸ்அப் பட்டன் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.