நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்… இங்கிலாந்தில் என்ன நகக்கிறது?

336
Advertisement

இங்கிலாந்தில் பெட்ரோல் தட்டுப்பாட்டை தவிர்க்க ராணுவத்தின் உதவியை நாட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதன் காரணமாக பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்களை இங்கிலாந்தில் பணியமர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பிறநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான டேங்கர் லாரி ஓட்டுநர்கள் இங்கிலாந்து திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இங்கிலாந்தில் சுமார் ஒரு லட்சம் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெட்ரோல் நிலையங்களுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல் எடுத்து செல்வது தடைபட்டு, நாடு முழுவதும் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பெட்ரோல் நிலையங்களுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல் எடுத்து செல்ல ராணுவத்தின் உதவியை நாட இங்கிலாந்து முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.