நான் 10th பாஸ் ஆகிட்டேன் – ஹேப்பி Mood -ல் முன்னாள் முதல்வர்

183
Advertisement

அரியானாவில் 87 வயதான முன்னாள் முதலமைச்சர்  ஓம் பிரகாஷ் சவுதாலா, விடா முயற்சியால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அரியானா முன்னாள் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்தார். அப்போது, கடந்த 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்தப்படியே 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதினார்.

ஆனால் 10ஆம் வகுப்பு ஆங்கில தாளை மட்டும் எழுதாததால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஆங்கில தேர்வு எழுதிய சவுதாலா, 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். இதன்மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, வெற்றி வாகை சூடினார்.

Advertisement

இதற்கான மதிப்பெண் சான்றிதழை மாநில கல்வித்துறை அதிகாரிகள் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிடம் வழங்கினர். மற்றொரு  சுவாரசியம் என்னவென்றால் சவுதாலாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில், தஸ்வி என்ற இந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.