தோனி குறித்து ஆழமாகப் பேசிய கோலி 

302
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது, ஆனால் போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்த கோலி, தனக்கும் தோனிக்கும் இருக்கும் ஆழமான நட்புறவுக் குறித்து பேசியிருந்தார், கோலி கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன்சிபி பதவியிலிருந்து விலகினார், இது குறித்துக் கோலி பேசுகையில், அப்போது பலரும் பல விதமான விமர்சனங்களைத் தொலைக்காட்சியில் கூறினார்கள், ஆனால் தோனி ஒருவர் மட்டும்தான் தனிப்பட்ட முறையில் மெசேஜ் (Message ) வழியாகப் பேசினார், எனவே ஒருவர் நம்மிடம் வெளிப்படுத்தும் அன்பு உன்னதமாக இருந்தால், அதனை இப்படித்தான் வெளிப்படுத்துவார்கள், அதைத்தான் தோனி  செய்தார், ஏனென்றால் எங்களது உறவில் பாதுகாப்பு உணர்வு அதிகம் இருக்கிறது, தோனியிடம் நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை, அவரும் என்னிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை, நாங்கள்  ஒருவரைக் கொருவர் நன்றாக நம்புகிறோம், என்று மிக உருக்கமாகப் பேசியிருந்தார் கோலி, எனவே கோலி மற்றும் தோனியின் நட்புறவு குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.