தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் வழிகள்

166
Advertisement

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைதிருக்க தூக்கம் மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போது இருக்கும் நவீன காலக்கட்டத்தில் பலரும் உறங்குவதற்கு முன்பு ஸ்மார் போன்களை பல மணி நேரம் பயன்படுத்தி விட்டு, பின்னர் மிக தாமதமாக நள்ளிரவில் உறங்குகிறோம்.

இதனால் நேரம் வீண்ணாவதோடு, கண் எரிச்சல் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வரும், எனவே இதனை தவிர்ப்பதற்கான வழிகளை, இத்தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் முக்கியமாக நீங்கள் எந்த செயலியை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கைப்பேசியின் செட்டிங்ஸ்-சில் டிஜிட்டல் வெல்பீயிங்-ஐ கிளிக் செய்வதன் மூலம் துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். அதனைப் பயன்படுத்தி

அதில் ஆப்ஸ் டைமர் வழியாக அச் செயலியை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தி விட்டு, பின்னர் தானாக ஆப் செய்யும் படி செட் செய்து கொள்ளலாம், இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கைப்பேசி பயன்பாட்டைத் தவிர்க்க அலாரம் செட் செய்யலாம்.

ஆனால் முக்கியமாக இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, கைப் பேசியை பயன்படுத்த வேண்டாம் என்ற தீர்மானத்தை உறுதியாக எடுக்க வேண்டும், நீங்கள் தூங்க சென்றுவிட்டாலும், கைப்பேசியில் அவ்வப்போது வரும் நோட்டிபிகேஷன்கள் உங்களை மீண்டும் கைப்பேசியை பயன்படுத்த தூண்டலாம்.

இதனால் கைபேசியை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்கவும் அல்லது படுக்கை அறைக்கு வெளியே வைக்க வேண்டும்.