தாக்குதலில் சிக்கி உயிரிழந்த பெண் பத்திரிகையாளர் 

340
Advertisement

ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ராணுவ ஆட்சிக்குபட்ட பிராந்தியத்தில் வாழும் மக்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே வேளையில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், அவர்களை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி அதிரடி தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர்.

இதுபோன்ற தேடுதல் வேட்டைகளின்போது அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில், பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே என்பவர் கொல்லப்பட்டார். மேலும் அவருடன் இருந்ந அலி சமூதி என்கிற மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார்.