தன்னை தாழ்த்தி பேசிய கோலி ரசிகர்கள் அதிர்ச்சி 

181
Advertisement

விராட் கோலி உலகத்தின் சிறந்த சேஸ் மாஸ்டர் என்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,

அரங்கத்தில் 90,000 மக்கள் இருந்ததால் வீரர்களுக்கு மிகவும் அழுத்தம் நிறைந்தப் போட்டியாக இருந்தது, ஆனால் கோலியின் வெறித்தனமான ஆட்டத்தால் இந்தியா வெற்றிப் பெற்ற நிலையில், இன்றுவரை இது கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய பேசு பொருளாக பேசப்படுகிறது. 

இதனால் கிரிக்கெட் விளையாட்டில் அனைத்து பார்மட்களிலும் ஆதிக்கம் செலுத்துவதால், இவரை கோட் என்று அழைக்கிறார்கள், அதாவது அசாத்திய வீரர் என்று ஆர்த்தம் , ஆனால் கோலியோ நான் பெரிய வீரர் இல்லை என்று சமீபத்தில் ஸ்டார் ஸ்போட்ஸ் நடத்திய  பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் நான் அசாத்திய கிரிக்கெட் வீரர் இல்லை, என்னை பொறுத்தவரையில், இதற்குத் தகுதியான வீரர்கள் சச்சின் மற்றும் சார் விவ்வியன் ரிச்சர்ட் என்றார்,  சச்சின் மற்றும் கோலி 5 வருடம் இந்திய அணியில் ஒன்றாக விளையாடியுள்ளனர், இக்கருத்தின் வழியாக கோலி தலைக்கனம் இல்லாத வீரர் என்று தெரியவந்துள்ளது.