டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

190
Advertisement

டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுக்கோட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, காரைக்கரில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அரபிக்கடல், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.