‘டாஸ்மாக்’ மது விற்பனைக்கு ரசீது கட்டாயம்

203
Advertisement

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், ரசீது தரவும் அதன் மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று இதுகுறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் என்றும், மதுபானங்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது