சென்னையின் 2-வது விமானநிலையம் செல்லும் நேரம் மற்றும் தூரம் இதோ…!

538
Advertisement

சென்னையில் 2 ஆவது விமான நிலையத்திற்காக பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தேர்ந்தெடுத்துள்ளது.

முன்னதாக ,சென்னையில் இரண்டவது விமானம் நிலையம் அமைக்க மாநிலக் குழுவானது, பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு இடங்களை பரிந்துரைத்திருந்தது, அதை ஆய்வு செய்த மத்திய குழு பன்னூர் அல்லது பரந்தூருக்கு சம்மதம் தெரிவித்துஉள்ள நிலையியல் ,இந்த இரண்டு இடங்களில் ஓர் இடம் இறுதி செய்யப்படும்.

இதில் , திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள “பன்னூர்” , திருவள்ளூரையும் காஞ்சிபுரத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மற்றும் “பரந்தூர்” காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

“ பன்னுரை “ பொறுத்தவரை சென்னை விமானநிலையத்தில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைத்துள்ளது. பயணநேரம் 1.15 மணி நேரம் ஆகலாம்.இதுவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும் – இதை தோராயமாக 1.45 நிமிடத்தில் சென்றடையலாம்.மற்றோரு முக்கிய பகுதியான கிண்டியில் இருந்து 50 கிமீ தொலைவிலும் சென்றடைய 1.25 நிமிடங்கள் ஆகலாம்.

அதுபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள “பரந்தூர்” சென்னை விமான நிலையத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும் இதன் பயண நேரம் 1.30 நிமிடங்கள் ஆகலாம்.இதுவே சென்னை சென்ட்ரலில் இருந்து 70 கிமீ தொலைவிலும் சென்றடைய 2 மணி நேரங்கள் கூட ஆகலாம்.மற்றும் கிண்டியில் இருந்து 64 கிமீ தொலைவிலும் பயண நேரம் 1.45 நிமிடங்கள் ஆகக்கூடும்.

இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு 2000 – 3000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பதால் மாநில அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது. அடுத்த 5 வருடங்களில் விமானநிலையம் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு 2000 – 3000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பதால் மாநில அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது.