சம்பள பணத்தை சேமிக்கும் முக்கிய வழிகள்

265
Advertisement

மாத சம்பளம் வாங்குபவரின் ஆசை எல்லாம், எப்படியாவது கடன் வாங்காமல், இருக்கின்ற சம்பளத்தை வைத்து, மாதத்தின் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்பதுதான், எனவே சம்பளத்தை சேமிக்கும் வழிகளை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

ஷாப்பிங் செல்லும் போது உங்களுக்குத் தேவையான தரமான பொருட்களை தேடி மிக குறைவான அளவில் வாங்கி பணத்தை சேமிக்க வேண்டும்

வீட்டில் அதிக தேவை இல்லாத பொருட்களை வாங்கி குப்பையாக குவிக்காமல் , தேவைப்படும்போது வாடகை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சுற்றுலாக அல்லது பிக்னிக் செல்ல ஆசைப்பட்டால், குறைவாக செலவு வைக்கும் இடங்களை முன்னதாகவே தேடி சென்று பயணிப்பது நல்லது.

அத்தியாவசிய பொருட்களைச் சலுகை இருக்கும் நேரத்தில், ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவது நல்லது, ஏனென்றால் பணத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.

மாத செலவுகளில் அதிக பணத்தை கரைப்பது மது மற்றும் புகைப் பழக்கத்தால் ஏற்படும் செலவுதான், இதனின் அளவை குறைப்பதும் உங்கள் பணத்தை சேமிக்க உதவுகிறது.

தரமற்ற உணவுகளை அடிக்கடி உணவகத்திற்கு சென்று சாப்பிடுவது பணத்தை வீணாக்குவது  மட்டும் இல்லாமல்  உடலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே இதுபோல சிறிய விஷயங்களை பின்பற்றுவதால் பணத்தை சேமிக்க உதவுகிறது.