பாலிவுட் நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே நடக்கும் டேட்டிங் தொடர்பான செய்திகள் மக்களின் கவனத்தை அதிகப்படியாகக் கவரும், முன்னதாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியவர்களின் டேட்டிங் செய்தி மிகவும் வைரலாக பேசப்பட்டது, ஆனால் இவர்களின் திருமணம் அதற்கு முற்றுப் புள்ளி வைத்தது, அதற்குப் பிறகு சமீபத்தில் ரிஷப் பந்த் மற்றும், லெஜெண்ட் பட கதாநாயகி ஊர்வசி ராவ்டேலா, ஆகியவர்கள் தங்களது சமூகவலைதளங்களில், இருவரின் முன்னால் காதல் குறித்துப் பேசிய சில விஷயங்கள், நெட்டிசென்கள் மத்தியில் காட்டு தீயாக பரவியது, இவர்களைத் தொடர்ந்து வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான சுப்மன் கில், முன்னதாக சச்சினின் மகளான சாரா டெண்டுல்கரை காதலித்து வந்ததாகப் பல செய்திகள் வெளியானது, ஆனால் சில மாதங்களாக இவர்களைப் பற்றிய செய்தி எதுவும் வெளிவரவில்லை, அதற்குப் பதிலாக சுப்மன் கில்மற்றும் பிரபல ஹிந்தி நடிகையான சாரா அலி கான் ஆகிய இருவரும் உணவகத்தில் ஒன்றாக உண்ணும் புகைப்படம் மீடியாவின் பார்வையை மிகவும் கவர்ந்துள்ளது இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்ற கேள்வி கிளம்பியுள்ளது, தனுஷுடன் கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் நடித்துள்ளார் சாரா அலி கான்.
