சச்சின் சாதனையைக் கோலி முறியடிக்க வாய்ப்பில்லை

155
Advertisement

1020 நாட்கள் கழித்துக் கோலி தனது 71 வது சதத்தை அடித்துள்ளார், இதனால் 100 சதங்கள் அடித்த சாதனை பட்டியலில் சச்சினுக்கு அடுத்தப்படியாக இருக்கும் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) சாதனையைச் சமன் செய்துள்ளார் கோலி, இதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர், எனவே அடுத்து 100 சதங்களைக் கோலி அடித்து  சச்சின் சாதனையை  முறியடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் சமீபத்தில் ஐ.சி.சி நடத்திய ரிவ்யூ (Review) என்ற நிகழ்ச்சியில் பேசிய பாண்டிங்கிடம், சச்சின் சாதனையைக் கோலி முறியடிப்பாரா என்று கேட்டபோது, இதை மூன்று வருடங்களுக்கு முன்னால் நீங்கள் கேட்டிருந்தால் , கண்டிப்பாகக் கோலி 100 சதங்கள் அடிப்பார் என்று நான் குறியிருப்பேன், ஆனால் தற்போது வருடங்கள் குறைவாக இருக்கிறது, இன்னும் 31 சதங்களை அடித்தால் மட்டுமே சச்சினின் சாதனையைக் கோலி முறியடிக்க முடியும். 31 சதங்கள் என்பது மிக மிக அதிகம், ஒரு வருடத்திற்கு 6 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 1 அல்லது 2,  டி – 20 சாதங்களை அடித்தால் மட்டுமே கோலிக்கு இது சாத்தியமாகும், எனவே கோலி 100 சதங்களை  அடிப்பது இனி சாத்தியம் இல்லை என்றார் பாண்டிங் , எனவே கோலி 100 சதங்களை அடித்து சச்சினின் சாதனையை முறியடிப்பாரா என்பதை கமெண்டில் கூறுங்கள்