கோலி அண்ணா கதையில் நடிக்க ஆசை

119
Advertisement

கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாக வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, குறிப்பாக தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் நடிப்பிற்குப் பல பாராட்டுக்கள் குவிந்தது, அதற்குப் பிறகு கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க பல விதமான நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்,  சமீபத்தில் வெளியான 83 திரைப்படம்  1983 ஆம் ஆண்டு இந்தியா அணி எப்படிப் போராடி உலகக் கோப்பையை கைப்பற்றியது, என்பது மிக அழகான கதை அமைப்பைக் கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கும், அதில் கபில் தேவ் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்ததால், அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது,

தற்போது விராட் கோலியின் வாழ்க்கை படமாகும் முயற்சிகள் நடந்து வருகின்றனர், இதில் கோலியின் பாத்திரத்தில் விஜய்தேவரகொண்ட நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார், சமீபத்தில் துபாய் சென்று இருந்த அவரிடம் நீங்கள் எந்த வீரரின் வாழ்க்கை கதையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்ட போது கோலியின் பாத்திரத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்தார், ஆனால் தற்போது வெளியான லைகர் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், விஜய்தேவரகொண்டவின் இக்கருத்தை நெட்டிசென்கள் கலாய்த்து வருகிறார்கள்.